Thursday 2nd of May 2024 10:50:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
நுவரெலியா-வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!

நுவரெலியா-வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!


நுவரெலியா மாவட்டம் வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்படுள்ளது.

மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம் வலப்பனை பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (ஜன-22) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றம் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலஅதிர்வு மஹகனதராவ, பல்லேகெலே மற்றும் ஹக்மன நில அதிர்வு அளவீடுகளில் பதிவாகியுள்ளதாக அனுர வல்பொல தெரிவித்தார்.

இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE